திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2024 (13:26 IST)

காங்கிரசுக்கு திமுக சொன்ன தொகுதியின் எண்ணிக்கை.. தமிழகத்திலும் உடைகிறதா இந்தியா கூட்டணி?

dmk congress
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 21 தொகுதிகள் பட்டியலை கொடுத்ததாக செய்திகள் வெளியான நிலையில் குறைந்தபட்சம் 14 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்ற கனவில் காங்கிரஸ் இருக்கிறது. ஆனால் திமுக தரப்போ நான்கே நான்கு தொகுதிகள் மட்டுமே தருவதாக கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய நான்கு தொகுதிகள் மட்டும் தான் கொடுக்க முடியும் என திமுக திட்டவட்டமாக கூறிய நிலையில் அதை காங்கிரஸ் கட்சியும் திட்டவட்டமாக நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே மேற்கு வங்கம், டெல்லி, ஹரியானா பீகார் ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி உடைந்து விட்ட நிலையில் தொகுதி பங்கீடு காரணமாக தமிழகத்திலும் இந்தியா கூட்டணி உடைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிகபட்சம் ஆறு தொகுதிகள் திமுக கொடுக்க வாய்ப்பு உண்டு என அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் அடுத்து எடுக்க போக முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Mahendran