திங்கள், 25 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2024 (07:34 IST)

ரோஹித் ஷர்மாவிடம் இருந்து அதைக் கற்றுக் கொண்டேன்… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஹைதராபாத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணைக்கு 231 ரன்கள் இலக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி முதலாவது இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 420 ரன்கள் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணிக்கு 231 இலக்காக கொடுக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் காலைவாரி சொதப்பினர்.

இரண்டாவது இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த வெற்றி பற்றி பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் “நான் கேப்டனானதில் இருந்து ஏராளமான தருணங்களை பெற்றிருக்கிறேன். ஆனால் இந்த வெற்றிதான் சிறப்பானது. இங்கிலாந்து அணியின் சிறப்பான வெற்றியாக இதைக் கருதுகிறேன்.

இந்திய மண்ணில் முதல் முறைக் கேப்டனாக செயல்படுகிறேன். முதல் இன்னிங்ஸில் இந்திய பவுலர்கள் எப்படி பந்துவீசினார்கள்? ரோஹித் ஷர்மா எப்படி பீல்டிங் செட் செய்தார் என்பதைக் கவனித்தேன். அதை நாங்கள் பவுலிங் செய்யும் போது செயல்படுத்தினோம்.  அது வெற்றிக்கு உதவியது” எனக் கூறியுள்ளார்.