1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2024 (07:26 IST)

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. இந்தியா போராடி தோல்வி..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடந்த நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 420 ரன்கள் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்கள் எடுத்த நிலையில் வெற்றிக்கு 231 ரன்கள் தேவை என்ற நிலையில் இரண்டாம் இன்னிங்ஸில் களம் இறங்கியது

இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள்  அவுட்டான நிலையில்  இந்தியா 69 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியின் ஒலி போப் அபாரமாக விளையாடி 196 ரன்கள் எடுத்ததை அடுத்து அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

Edited by Siva