1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rahul Dravid going dubai to join indian squad

குணமடைந்தது கொரோனா.. உடனே துபாய் பறந்த ராகுல் டிராவிட்!

Rahul Dravid
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் குணமடைந்த நிலையில் துபாய் புறப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராகவும், தற்போதைய இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் இருந்து வருபவர் ராகுல் ட்ராவிட். அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசியகோப்பை டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் அரபு அமீரகம் சென்றுள்ளனர்.

ஆனால் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் ஆசியக்கோப்பை கிரிக்கெட்டில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது கொரோனா குணமான நிலையில் உடனடியாக துபாய் புறப்பட்டுள்ளார் ராகுல் டிராவிட். இன்று இந்தியா – பாகிஸ்தான் இடையே முதல் போட்டி நடைபெற உள்ள நிலையில் ராகுல் டிராவிட் வேகமாக துபாய் சென்றுள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
2024-27 ஐசிசி ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய டிஸ்னி ஸ்டார்