திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 8 ஜூன் 2023 (08:48 IST)

அஸ்வினை எடுக்காதது தவறா?.. இங்கிலாந்தில் அவருடைய தாக்கம் என்ன? –ஒரு புள்ளி விவரம்!

இந்தியா தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸி அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. போட்டி நடக்கும் லண்டன் ஓவல் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால் உலகின் நம்பர் ஒன் பௌலரான அஸ்வின் அணியில் எடுக்கப்படவில்லை. இது பல விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

முதல்நாள் ஆட்டமுடிவில் ஆஸி அணி 327 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்களை இழந்துள்ளது. ஆஸி அணி 3.85 என்ற ரன்ரேட்டில் ஸ்கோர் சேர்த்துள்ளது. இதனால் அஸ்வினை எடுக்காமல் விட்டது மிகப்பெரிய தவறு என குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அஸ்வின் இதுவரை இங்கிலாந்தில் விளையாடியுள்ள போட்டியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பது பற்றிய ஒரு புள்ளி விவரத்தைப் பார்ப்போம். அஸ்வின் இதுவரை 7 போட்டிகளில் இங்கிலாந்தில் விளையாடியுள்ளார். அதில் ஒரு போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டியில் தோற்றுள்ளது.

அதே போல அஸ்வின் அறிமுகத்துக்குப் பிறகு அவர் இல்லாமல் 16 போட்டிகளை விளையாடி நான்கில் வெற்றியும் 10ல் தோல்வியும் 2 போட்டிகளில் டிராவும் செய்துள்ளது. அவர் இல்லாத போட்டிகளில்தான் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால் அவரை எடுத்திருந்தாலும் பெரிதாக மாற்றம் எதுவும் இருந்திருக்குமா என்பது தெரியவில்லை.