1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ravichandran ashwin not in WTC playing 11 squad

டெஸ்ட் போட்டியில் அஷ்வின் இல்ல.. ஸ்மித்க்கு கொண்டாட்டம்தான்!

Ashwin
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம்பெறவில்லை.



இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் ட்ராபியை வென்றால் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் தொடர்ந்து கோப்பை வென்ற அணியாக ஆஸ்திரேலியா சாதனை படைக்கும். இந்தியா வென்றால் 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ட்ராபியை வென்று சாதனை படைக்கும்.

தற்போது டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஆனால் அதிர்ச்சிகரமாக இந்தியாவின் நம்பர் 1 பவுலரான ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெறவில்லை. இதுகுறித்து பேசிய அணி கேப்டன் ரோகித் சர்மா “இது ஒரு கடினமான முடிவுதான். அணிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது” என கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் ஸ்டீவ் ஸ்மித் நல்ல ஃபார்மில் உள்ள நிலையில் அவரது பேட்டிங்கை அஸ்வின் சிறப்பாக கட்டுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு முந்தைய டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் அதை சிறப்பாகவே செய்தார். தற்போது அணியில் ஷர்துல் தாகுர், உமேஷ் யாதவ், ஷமி, சிராஜ் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எனினும் அஸ்வின் போன்ற ஒரு ஸ்பின் பவுலர் இருந்திருக்கலாம் என்பது பலரது கருத்தாக உள்ளது.

Edit by Prasanth.K
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: டாஸ் வென்ற இந்தியா பெளலிங்.. 4 ரன்களில் ஒரு விக்கெட்..!