1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 18 நவம்பர் 2024 (12:07 IST)

இந்திய ஆஸ்திரேலியா தொடர்… அணியில் இடம் கிடைக்காததால் புஜாரா எடுத்த முடிவு!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து பார்டர் கவாஸ்கர் தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி வரும் 22ஆம் தேதி பெர்த்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில்,  ரோஹித் ஷர்மாவுக்கு குழந்தை பிறந்துள்ளதால் அவர் இந்தியாவிலேயே உள்ளார். அவருக்குப் பதிலாக இந்திய அணிக்கு கேப்டனாக பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, கோலி மற்றும் பும்ரா ஆகியோர் மட்டுமே சீனியர் வீரர்களாக உள்ளனர். மற்ற வீரர்கள் அனைவரும் இளம் வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாடி தொடரை வென்ற போது அதற்கு முக்கியக் காரணமாக இருந்த புஜாரா கூட அணியில் இடம்பிடிக்கவில்லை.

இந்நிலையில் இந்த தொடரில் இப்போது புஜாரா வர்ணனையாளராகக் களமிறங்கவுள்ளார். இது சம்மந்தமான ஒப்பந்தத்தில் சமீபத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.