ஞாயிறு, 15 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 16 நவம்பர் 2024 (11:19 IST)

கடவுளுக்கும் கேப்டனுக்கும் நன்றி… தொடர் நாயகன் திலக் வர்மா பூரிப்பு!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நேற்று நடந்த நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

நேற்று நடைபெற்ற நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்தியா முதலில் பேட்டிங் செய்து ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 109 ரன்கள் மற்றும் திலக் வர்மா 120 ரன்கள் எடுத்தனர். அதன் பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 150 ரன்களுக்குள் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா தொடர்நாயகனாக அறிவிக்கப்பட்டார். விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய அவர் “கடந்த ஆண்டு இதே மைதானத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினேன். இன்றைய இன்னிங்ஸ் எனக்கு மிகவும் முக்கியமானது. நான் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. கடவுளுக்கும் கேப்டனுக்கும்தான் நன்றி சொல்லவேண்டும். சில மாதங்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்தேன். இன்றைய மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.