ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 நவம்பர் 2024 (10:13 IST)

அந்தரத்தில் தொங்கும் பார்டர் - கவாஸ்கர் ட்ராஃபி! அடுத்தடுத்து விலகும் முக்கிய வீரர்கள்! - என்ன காரணம்?

Border Gavaskar Trophy

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலிருந்து இந்தியாவின் முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து விலகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

முந்தைய டெஸ்ட்டில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி சொந்த மண்ணிலேயே வாஷ் அவுட் ஆனது, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் 22ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ள பார்டர் - கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய அணி சென்றிருக்கிறது.

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேற ஆஸ்திரேலியாவுடனான இந்த போட்டியில் இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில் இதன் முதல் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அவருக்கு பதிலாக பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கிறார். பயிற்சி ஆட்டத்தின்போது ஏற்பட்ட காயம் காரணமாக தொடக்க பேட்ஸ்மேனான சுப்மன் கில்லும், மிடில் ஆர்டரில் விளையாடும் கே.எல்.ராகுலும் முதல் டெஸ்ட்டில் விளையாடவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

 

இந்திய அணிக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக கருதப்படும் பார்டர் - கவாஸ்கர் தொடரில் முதல் போட்டிக்கே முன்னணி வீரர்கள் இல்லாத நிலை கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. தற்போது அவர்களுக்கு மாற்றாக சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல் ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் முன்னதாக ஆஸ்திரேலியா ஏ அணியுடன் நடந்த போட்டியில் சிறப்பாக ஆடியிருக்கவில்லை. அவர்கள் தற்போது எப்படி மெயின் அணியை எதிர்கொள்வார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K