தொடர்புடைய செய்திகள்
- உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!
- ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!
- ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்ட இந்தியா vs கனடா போட்டி!
- உலகக் கோப்பை தொடரின் முதல் 200+ ஸ்கோர்… இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா!
- ஆஸ்திரேலியா மட்டும் இறுதிப் போட்டிக்கு வரக் கூடாது… இந்திய முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் சொல்லும் காரணம்!
அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் ஹாட்ரிக்… உலக சாதனை படைத்த பேட் கம்மின்ஸ்!
பேட் கம்மின்ஸ் ஆஸி அணிக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் தொட்டதெல்லாம் வெற்றியாகி வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடந்த நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது அவர் தலைமையிலான அணி.
அதன் பின்னர் நவம்பர் மாதம் நடந்த உலகக் கோப்பை தொடரையும் அவர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது நடந்து வரும் டி 20 உலகக் கோப்பை தொடரில் அவர் ஆஸி அணியில் ஒரு வீரராக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இப்போது அவர் உலகக் கோப்பை தொடரில் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் ஹாட்ரிக் எடுத்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். வங்கதேச அணிக்கெதிராக ஹாட்ரிக் அடித்த அவர் மீண்டும் நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் ஹாட்ரிக் எடுத்துள்ளார்.