ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 23 ஜூன் 2024 (08:29 IST)

இந்திய அணிக்கு இது புதுசு… ஆனா அது தேவைதான் – அஸ்வின் கருத்து!

நடந்து வரும் டி 20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 195 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் கோலி, ரிஷப் பண்ட், ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹர்திக் பாண்ட்யா அதிகபட்சமாக 27 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார்.

இதன் பின்னர் ஆடவந்த பங்களாதேஷ் அணி ஆரம்பம் முதலே ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறியது. அதனால் அடித்து ஆடமுயன்று அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் எல்லோரும் 20 ரன்கள் சேர்த்தபின்னர் அதிரடியாக ஆடமுயன்று அவுட் ஆகினர். இது குறித்து பேசியுள்ள அஸ்வின் “இந்த அணுகுமுறை இந்திய அணிக்கு புதிதுதான். ஆனால் இதுதான் இப்போதைய தேவை. அதிலும் முதல் பேட்டிங் செய்யும் போது அவசியம்.  அனைத்து பேட்ஸ்மேன்களும் மிகச்சிறந்த ஆட்டத்திறனை வெளிக்காட்டினர்” எனக் கூறியுள்ளார்.