ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்ட இந்தியா vs கனடா போட்டி!

நடந்துவரும் டி 20 உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டன. ஏ பிரிவில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.

இந்நிலையில் நேற்று இந்திய அணி ஃப்ளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் கனடா அணியை எதிர்த்து விளையாட இருந்தது. இந்த போட்டி நடைபெறும் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கடும் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்றைய போட்டி மழை மற்றும் ஈரமான மைதானப்பரப்புக் காரணமாக டாஸ் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இதன் மூலம் லீக் போட்டிகளில் இந்தியா விளையாடும் போட்டிகள் நிறைவுக்கு வந்தன. சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடவுள்ளது.