1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Pat Cummins poking comment on Rohith Sharma idea

ரோஹித் ஷர்மாவின் கருத்தைக் கிண்டல் செய்த ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ்!

ரோஹித் ஷர்மா
நேற்று நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸி அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இந்த போட்டியில் தோற்றதன் மூலம் இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகும் பட்டத்தை கை நழுவ விட்டுள்ளது இந்தியா.

போட்டி முடிந்ததும் பேசியுள்ள இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா “டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டியை ஒரே போட்டியாக நடத்தாமல், மூன்று போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும். மேலும் இறுதிப் போட்டி எப்போதும் ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் மட்டுமே நடக்கக் கூடாது” என இரு ஆலோசனைகளைக் கூறியுள்ளார்.

இதுபற்றி ஆஸி அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸிடம் கேட்ட போது “3 போட்டிகள் கொண்ட தொடர் என்ன? 16 போட்டிகள் கொண்ட தொடராகக் கூட நடத்தலாம். ஆனால் ஒலிம்பிக்கில் எல்லாம் ஒரு போட்டியாகதான் நடத்தப்படுகிறது. அதில்தான் வீரர்கள் வெற்றி பெறுகிறார்கள்” என நக்கலாக பதில் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
தோனி மட்டும் தனியாக விளையாடி உலகக்கோப்பைகளை வென்றாரா? ஹர்பஜன் சிங் கேள்வி..!