திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 ஜூன் 2023 (18:47 IST)

இந்தியாவின் டெஸ்ட் தோல்விக்கு ஐபிஎல் காரணமா? – ராகுல் ட்ராவிட் கருத்து!

இங்கிலாந்தில் நடைபெற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து ராகுல் ட்ராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.



லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் ஐசிசியின் அனைத்து வகை சாம்பியன் கோப்பைகளையும் வென்று ஆஸ்திரேலியா புதிய சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் தோல்விக்கு பலரும் பல காரணங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் “ஐபிஎல் போட்டிகள் முடிந்து வீரர்கள் திரும்ப வந்து பயிற்சி செய்வதற்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. சாக்குபோக்கு சொல்ல வேண்டும் என்பதற்காக நான் இதை சொல்லவில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதை ஆராய்ந்து திருந்தம் செய்து அடுத்தடுத்த தொடர்களில் முன்னேறுவோம்” என கூறியுள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டிகள் தொடங்கும் முன்னரே ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், இந்திய வீரர்கள் ஐபிஎல் விளையாடி சோர்வாக இருப்பதை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K