1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Paramisran, Dhawan action high score Will Rajasthan Royals reach the target

பரமிஸ்ரன், தவான் அதிரடியால் உயர்ந்த ஸ்கோர் ! இலக்கை எட்டுமா ராஜஸ்தான் ராயல்ஸ்?

punjab - Rajasthan
ஐபிஎல்-2020 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்றைய  போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன், பஞ்சாப் கிங்ஸ் அணி மோதி வருகிறது.

இன்றைய போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்  தேர்வு செய்தது.

எனவே பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.  ஆட்டம் தொடங்கிய நிலையில்,  பஞ்சாப் அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக  பரமிஸ்ரன் சிங் 60( 34பந்துகள்) ரன்கள், ஷிகர் தவான் 86 (56 பந்துகள்) ரன்கள் அடித்து அணியின் ஸ்கோர் உயர காரணமாயினர்.

அதன்பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். ஆயினும், ஜிட்டேஷ் சர்மா 27 ரன்கள் சேர்த்தார். எனவே 20 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் அணி,4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் அடித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 198 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில், ஹோல்டர் 2 விக்கெட்டும்,சாஹல் மற்றும் அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல்-2023: ஜூரெல் அதிரடி வீண்! பஞ்சாப் கிங்ஸ் அணி திரில் வெற்றி....