1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Shikar dhawan career may be end says dinesh karthik

ஷிகார் தவானின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது… தினேஷ் கார்த்திக் கருத்து!

ஷிகார் தவான்
இந்திய அணியில் இளம் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி தேர்வுக்குழுவுக்கு அதிக வேலைகளை கொடுத்து வருகின்றனர்.

ஷிகார் தவான் இந்திய அணியில் இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் வரை அவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போதைய சூழல் அதற்கு இடம் கொடுக்காது என்பது போல மாறியுள்ளது.

ஏனென்றால் அவரின் தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு இஷான் கிஷான், சுப்மன் கில் ஆகிய இரண்டு வீரர்கள் கடுமையான போட்டியாளர்களாக உருவாகி வருகின்றனர். இருவருமே தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை மிகச் சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இஷான் கிஷானின் சமீபத்தைய இரட்டை சதம் குறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக் “"சுவாரஸ்யமாக, ஷுப்மான் கில் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ரோஹித் ஷர்மா அணிக்கு திரும்பும்போது யாராவது ஒருவர் வெளியேற வேண்டும்.  அது தவானாக இருக்கலாம். அவரின் மிகச்சிறப்பான கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஒரு சோகமான முடிவாக இது இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
சஞ்சு சாம்சனுக்கு அழைப்பு விடுத்ததா அயர்லாந்து கிரிக்கெட் வாரியம்?- பரபரப்பு தகவல்!