1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 மார்ச் 2023 (21:42 IST)

''எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொண்டேன்-'' பிரபல கிரிக்கெட் வீரர்

tatoos
தன் 14-15 வயதில் எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொண்டதாக கிரிக்கெட் வீரர் தவான் கூறியுள்ளார்.

ஐபிஎல் ஆண்கள் கிரிக்கெட் வரும் மார்ச் 31 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டிக்கு, அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், தொடக்க ஆட்டத்தில், சென்னை கிங்ஸுகு எதிராக குஜராத் டைட்டன் மோதவுள்ளது. இந்த ஆண்டுப் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக தவ்வான்  பொறுப்பேற்கிறார்.

இதனால், பஞ்சாப் அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  இந்த நிலையில், தன் 14-15 வயதில் எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொண்டதாக தவான் கூறியுள்ளார்.

shikhar dhawan

இதுகுறித்து அவர் கூறியதாவது: '' 14-15 வயது இருக்கும்போது நான் என் குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமல் மணலி சென்று, என் முதுகில் பச்சை குத்திக்கொண்டேன். இது என் வீட்டிற்குத் தெரியாமல் வைத்திருந்தேன். பின்னர், 4 மாதங்களுக்குப் பின்னர் அப்பாவுக்கு தெரிந்து, என்னை அடித்தார். எனக்குப் பச்சை குத்தப்பட்ட ஊசி எத்தனை பேருக்கு பச்சை குத்தப்பட்டது என்று தெரியவில்லை. அதனால் நான் எச்ஐவி பரிசோதனை செய்துகொண்டேன். அப்போது முதல் இன்று முதல்  நெகட்டிவ் ரிசல்ட் தான் வந்துள்ளது'' என்று கூறியுள்ளார்.

மேலும், ''என் முதுகில்  நான் குத்திய முதல் டாட்டூ தேள் உருவம் ஆகும்'' என்று கூறியுள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.