1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Pakistan lost their last hope to enter semi final

பாகிஸ்தானின் அரையிறுதிக் கனவை சுக்கு நூறாக்கிய இங்கிலாந்து!

பாகிஸ்தான்
புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி அரையிறுதி செல்வதற்கு சில நடக்க இயலாத வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தான் அணி தங்கள் கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து இங்கிலாந்தை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் நியுசிலாந்தை விட கூடுதல் நெட் ரன்ரேட் பெறும். அப்போது நான்காவது அணியாக அரையிறுதிக்கு செல்லும்.

ஒரு வேளை இரண்டாவதாக பேட்டிங் செய்தால் 2.3 ஓவர்களிலேயே இங்கிலாந்து நிர்ணயிக்கும் இலக்கை எட்டவேண்டிவரும். இந்த இரண்டுமே நடக்க சாத்தியமில்லாதது என்பதால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்த இங்கிலாந்து அணி மளமளவென ரன்களை சேர்த்து வருகிறது. இப்போது வரை 9 ஓவர்களில் 68 ரன்களை சேர்த்து விக்கெட்டை கொடுக்காமல் உள்ளது. இதனால் இந்த இலக்கை பாகிஸ்தான் அணியால் 3 ஓவர்களில் கண்டிப்பாக எட்ட முடியாது என்பதால் பாகிஸ்தானின் அரையிறுதி கனவை சுக்கு நூறாக்கியுள்ளது இங்கிலாந்து அணி.
அடுத்த கட்டுரையில்
வங்கதேச அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சூப்பர் வெற்றி