திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 11 நவம்பர் 2023 (08:15 IST)

ரன்ரேட்ட அதிகமாக்க திட்டம் இருக்கு… அதுக்கு இவங்கள்லாம் சரியா விளையாடனும்- பாபர் அசாம் கருத்து!

புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி அரையிறுதி செல்வதற்கு சில நடக்க இயலாத வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தான் அணி தங்கள் கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து இங்கிலாந்தை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் நியுசிலாந்தை விட கூடுதல் நெட் ரன்ரேட் பெறும். அப்போது நான்காவது அணியாக அரையிறுதிக்கு செல்லும்.

ஒரு வேளை இரண்டாவதாக பேட்டிங் செய்தால் 2.3 ஓவர்களிலேயே இங்கிலாந்து நிர்ணயிக்கும் இலக்கை எட்டவேண்டிவரும். இந்த இரண்டுமே நடக்க சாத்தியமில்லாதது என்பதால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு வருவதற்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இன்று இங்கிலாந்தை எதிர்த்து விளையாடும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் இங்கிலாந்துக்கு எதிரான திட்டம் குறித்து பேசியுள்ளார். அதில் “எங்களிடம் ரன்ரேட்டை அதிகமாக்கும் திட்டம் உள்ளது. முதல் 10 ஓவர்கள் நிதானமாக விளையாடிவிட்டு பின்னர் இலக்கை நோக்கி செல்வோம். எங்கள் அணியின் பகார் ஸ்மான் 30 ஓவர்கள் வரை களத்தில் இருந்தால் தேவையான இலக்கை எட்டுவோம் என நினைக்கிறேன். அதுபோல இப்திகார் அஹமது மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரின் செயல்பாடும் மிக முக்கியமானது.” எனக் கூறியுள்ளார்.