வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2023 (20:15 IST)

பல லட்சம் ஜி மெயில் கணக்குகளை நீக்கும் கூகுள்

அடுத்த மாதம் பல லட்சம் ஜி மெயில் கணக்குகளை கூகுள் நிறுவனம் நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

உலகின் மிகப்பெரிய தேடுபொறி தளமாக கூகுள் இயங்கி வருகிறது. இந்த  நிறுவனத்தின் சிஇஓ எனப்படும் தலைமைச் செயலதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்றைய இணையதள உலகில் எல்லோர் கைகளிலும் ஸ்மார் போன் உள்ளது. எனவே யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைத்து செயல்களிலும் கணக்கு தொடங்குவதற்கு கூகுள் கணக்கு முக்கிய தேவையாக உள்ளது.

இந்த நிலையில், பல லட்சம் ஜி மெயில் கணக்குகளை கூகுள் நிறுவனம் நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அதாவது கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் கூகுள் கணக்குகள் மட்டுமே  டெலிட் செய்யப்படும்  கூறப்படுகிறது.