தொடர்புடைய செய்திகள்
- இளையராஜா பயோபிக் படத்திற்கு திரைக்கதை எழுதும் கமல்?
- IPL அமைப்பின் மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?
- ஓய்வில் இருந்தது ஐபிஎல் விளையாட இல்ல.. என் ப்ளானே வேற..! – ஹர்திக் பாண்ட்யா ஓபன் டாக்!
- காட்டுக்குயிலு மனசுக்குள்ள மொமண்ட்... ஹர்திக்கை கட்டியணைத்த ரோஹித் ஷர்மா!
- அறுவை சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வருகிறேன்..! – சத்குரு பேசி வெளியிட்ட வீடியோ!
454 நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கப் போகும் ரிஷப் பண்ட்!
கடந்த ஆண்டு பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகியுள்ள ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்குகிறார்.
இதற்காக அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் கடந்த சில மாதங்களாக பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவரை பரிசோதித்த என் சி ஏ அவருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதையடுத்து தற்போது பிசிசிஐ ரிஷப் பண்ட் 100 சதவீத உடல் தகுதியோடு இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு மீண்டும் கேப்டனாகியுள்ளார்.
இதன் மூலம் 454 நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பண்ட் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்குகிறார். அவரின் பழைய அதிரடியைக் காண ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.