திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2024 (12:34 IST)

சிஎஸ்கேவை வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்டுக்கு அபராதம்! – ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு!

நேற்றையை ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்திருந்த நிலையில் சேஸிங்கில் இறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை குவித்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதில் கடைசி ஓவர்களில் களமிறங்கிய எம்.எஸ்.தோனி 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடித்து அணியின் ரன்களை மேலும் அதிகமாக்கினார். இந்த போட்டியில் டெல்லி அணி பந்து வீச தாமதம் காட்டியதால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி 3 ஓவர்கள் வீசப்பட்டது.


இதற்காக டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்டிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சிஎஸ்கே அணி தோற்றபோது தோனியின் வருகை சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள அதே சமயம், வெற்றி பெற்றும் டெல்லி அணி அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Edit by Prasanth.K