1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (16:04 IST)

டிராவில் முடிந்த கடைசி டெஸ்ட்: தொடரை வென்றது நியூசிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை டிரா செய்தது மூலம் தொடரை வென்றது நியூசிலாந்து அணி.
 
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பேர்ஸ்டோவ் சதமடித்தார். நியூசிலாந்து அணி சார்பில் சவுத்தி 6 விக்கெட்டுகளையும், போல்ட் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
பின்னர் முதல் இன்னிங்ஸ் விளையாட களமிறங்கி நியூசிலாந்து அணி 278 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வாட்லிங் 85 ரன்களை எடுத்தார். இங்கிலாந்து அணி சார்பில் பிராட் 6 வீக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து, 29 ரன்கள் முன்னிலையோடு இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டோன்மேன் 60 ரன்களும், வின்ஸ் 76 ரன்களும் எடுத்தனர். கிராண்ட்ஹோம் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
 
இதனையடுத்து, 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 4-வது நாள் ஆட்ட முடிவில் 42 ரன்கள் எடுத்தது. போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்தது. அதில் இங்கிலாந்து பவுலர்கள் நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகளை கைப்பற்ற போராடினர். ஆனால், சோதி தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மூலம் நியூசிலாந்து அணி, 5-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. இதனால் ஆட்டம் டிரா ஆனது.
 
இதன்மூலம் 2 டெஸ்ட் கொண்ட போட்டி தொடரை நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.