திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 மார்ச் 2018 (15:29 IST)

நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி: பகல்-இரவு டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தியது

ஆக்லாந்தில் நடைபெற்ற பகல்- இரவு டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி  கடந்த மார்ச் 22-ம் தேதி ஆக்லாந்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் வீக்கெட்டுகளை நியூசிலாந்து பவுலர்கள் சீட்டுகட்டுகளை போல சரித்தனர். இதனால் இங்கிலாந்து அணி 20.4 ஓவர்களில் 58 ரன்கள் எடுத்து அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக போல்ட் 6 வீக்கெட்டுகளையும், சவுத்தி 4 வீக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 141 ஓவர்களில் 427 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்திருந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தனர். அதிகபட்சமாக வில்லியம்சன் 102 ரன்களும், நிக்கோலஸ் 145 ரன்களும் எடுத்தனர்.
 
இதனையடுத்து, 369 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாட களமிறங்கிய இங்கிலாந்து அணி 126 ஓவர்களில் 320 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 66 ரன்களும், வோக்ஸ் 52 ரன்களும் எடுத்தனர். இதனால் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.