வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 31 மார்ச் 2018 (16:39 IST)

2-வது டெஸ்ட் போட்டி: இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 192/6

கிறிஸ்ட்சர்சில் நடந்து வரும் 2-வது பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்துள்ளது.
 
நேற்று கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இங்கிலாந்து- நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் நியூசிலாந்து அணியினர் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வீக்கெட்டுகளை இழந்தனர்.
 
இதனால் அந்த அணி 94 ரன்னுக்கு 5 வீக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் பேர்ஸ்டோவ் சிறப்பாக விளையாடியதால் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக பேர்ஸ்டோவ் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. பேர்ஸ்டோவ் சதமடித்து ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 96.5 ஓவர்களில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சவுத்தி 6 விக்கெட்டுகளையும், போல்ட் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
பின்னர் முதல் இன்னிங்ஸ் விளையாட களமிறங்கி நியூசிலாந்து அணியின் வீக்கெட்டுகளை இங்கிலாந்து அணியின் பவுலர்கள் சீட்டு கட்டுகளை போல சரித்தனர். இதனால் அந்த அணி 35 ரன்களுக்கு 5 வீக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது.
 
அதன்பிறகு வாட்லிங்கின் நிதானமான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 6 வீக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் அதிகப்பட்சமாக பிராட் 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். வாட்லிங் 77 ரன்களுடனும், சவுத்தி 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.