வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 2 ஏப்ரல் 2018 (15:24 IST)

2-வது டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணிக்கு 382 ரன் இலக்கு

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 382 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 
 
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பேர்ஸ்டோவ் சதமடித்தார். நியூசிலாந்து அணி சார்பில் சவுத்தி 6 விக்கெட்டுகளையும், போல்ட் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
பின்னர் முதல் இன்னிங்ஸ் விளையாட களமிறங்கி நியூசிலாந்து அணி 278 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வாட்லிங் 85 ரன்களை எடுத்தார். இங்கிலாந்து அணி சார்பில் பிராட் 6 வீக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து, 29 ரன்கள் முன்னிலையோடு இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டோன்மேன் 60 ரன்களும், வின்ஸ் 76 ரன்களும் எடுத்தனர். கிராண்ட்ஹோம் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
 
இதன்மூலம், 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 4-வது நாள் ஆட்ட முடிவில் 42 ரன்கள் எடுத்துள்ளது. லதாம் 25 ரன்களுடனும், ரவால் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.