திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 4 மே 2024 (06:59 IST)

கே கே ஆர் பவுலர்களிடம் சரணடைந்த பேட்ஸ்மேன்கள்.. எளிய இலக்கை கோட்டை விட்ட மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் தொடரின் 51 ஆவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன் படி களமிறங்கிய கே கே ஆர் அணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் வெங்கடேஷ் ஐயர் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் மட்டும் நிதானமாக விளையாடி 169 என்ற கௌரவமான ஸ்கோருக்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து எளிய இலக்கை துரத்தி விளையாடிய மும்பை பேட்ஸ்மேன்களும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். அந்த அணியின் ரோஹித் ஷர்மா, இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவ் மட்டும் நிலைத்து நின்று அரைசதம் அடித்தார். இதனால் 18.5 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 145 ரன்கள் மட்டுமே சேர்த்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த தோல்வியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.