1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Playing under hardhik pandya is an ordinary one rohith sharma

ஹர்திக் தலைமையில் விளையாடுவது சாதாரணமான ஒன்றுதான்… ரோஹித் ஷர்மா கருத்து!

ஹர்திக் பாண்ட்யா
குஜராத் டைட்டன்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்து வெற்றிகரமாக ஒரு கோப்பையையும் ஒருமுறை இரண்டாம் இடத்துக்கும் அணியை வழிநடத்திச் சென்றார் ஹர்திக் பாண்ட்யா. ஆனால் அவர் திடீரென மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாக்கப் பட்டார். இந்த முடிவு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.

இது சம்மந்தமாக ரோஹித் ஷர்மா எந்த ஒரு கருத்தையும் சொல்லாத ரோஹித் ஷர்மா இப்போது இதுபற்றி பேசியுள்ளார். அதில் “மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் விளையாடுவது சாதாரணமான ஒன்றுதான். நான் நிறைய கேப்டன்கள் கீழ் விளையாடி இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஆனாலும் ரோஹித் ஷர்மாவுக்கு தான் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதில் உடன்பாடு இல்லை என்றும் அவர் அடுத்த சீசனில் ஏலத்தின் மூலம் வேறு அணிக்கு செல்லவே விரும்புகிறார் என்றும் கிசுகிசுக்கள் எழுந்துள்ளன.
அடுத்த கட்டுரையில்
‘மன்மதனே நீ கலைஞன்தான்’.. ஒரே பாட்டு.. ப்ளேயர்ஸ் அவுட்டு! – இப்படி வேற சாபம் இருக்கா?