தொடர்புடைய செய்திகள்
- மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் அபாரம்… தட்டுத் தடுமாறி டீசண்ட்டான ஸ்கோரை எடுத்த கே கே ஆர்!
- டாஸ் வென்ற மும்பை எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!
- வெற்றிப் பாதைக்கு திரும்புமா மும்பை இந்தியன்ஸ்… கே கே ஆர் அணியோடு பலப் பரீட்சை!
- ஹர்திக் தலைமையில் விளையாடுவது சாதாரணமான ஒன்றுதான்… ரோஹித் ஷர்மா கருத்து!
- மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!
என்னது ரோஹித் இம்பேக்ட் ப்ளேயரா?... மீண்டும் ஆட்டிட்யூட் காட்டி ரசிகர்களிடம் கெட்ட பேரை சம்பாதிக்கும் ஹர்திக்!
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்து வெற்றிகரமாக ஒரு கோப்பையையும் ஒருமுறை இரண்டாம் இடத்துக்கும் அணியை வழிநடத்திச் சென்றார் ஹர்திக் பாண்ட்யா. ஆனால் அவர் திடீரென மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாக்கப் பட்டார். இந்த முடிவு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.
இது சம்மந்தமாக ரோஹித் ஷர்மா எந்த ஒரு கருத்தையும் சொல்லாத ரோஹித் ஷர்மா இப்போது இதுபற்றி பேசியுள்ளார். அதில் “மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் விளையாடுவது சாதாரணமான ஒன்றுதான். நான் நிறைய கேப்டன்கள் கீழ் விளையாடி இருக்கிறேன்” எனக் கூறியிருந்தார். ஆனாலும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தோடு ரோஹித் ஷர்மாவுக்கு சுமூகமான உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அவரை ஆடும் லெவனில் ஹர்திக் எடுக்கவில்லை. மாறாக அவரை இம்பேக்ட் ப்ளேயர் விதி மூலமாக பேட்டிங் மட்டும் செய்யவைத்தனர். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.