1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 3 மே 2024 (21:20 IST)

மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் அபாரம்… தட்டுத் தடுமாறி டீசண்ட்டான ஸ்கோரை எடுத்த கே கே ஆர்!

ஐபிஎல் தொடரின் 51 ஆவது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன் படி களமிறங்கிட கே கே ஆர் அணியில் அதிரடிக்குப் பெயர் போன நரேன் மற்றும் பிலிப் சால்ட் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த வீரர்களும் வருவதும் பெவிலியனுக்கு திரும்புவதுமாக இருந்தனர். இந்நிலையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் மற்றும் நிலைத்து நின்று அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

மனிஷ் பாண்டே 42 ரன்களில் ஆட்டமிழக்க, வெங்கடேஷ் அரைசதம் அடித்து 70 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் கொல்கத்தா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 169 ரன்கள் சேர்த்தது. மும்பை தரப்பில் பும்ரா, நுவான் துஷாரா ஆகியோர் தலா 3 விக்கெட்களை அதிகபட்சமாக வீழ்த்தினர்.