திங்கள், 25 செப்டம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 31 மே 2023 (16:28 IST)

என்னால் தூங்க முடியவில்லை.. ஐபிஎல் கடைசி ஓவர் வீசிய மோஹித் ஷர்மா!

ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று முன் தினம் குஜராத் அகமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டில் வீழ்த்தியது. இதையடுத்து சென்னை அணி 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்த போட்டியில் கடைசி ஓவரில் 13 ரன்களை டிஃபெண்ட் செய்து பந்துவீசிய மோஹித் ஷர்மா முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஆனால் அடுத்த இரண்டு பந்துகளில் 10 ரன்களைக் கொடுத்தார். இதன் மூலம் குஜராத் தோல்விக்குக் காரணமாக அமைந்தார்.

இந்த போட்டி பற்றி பேசியுள்ள மோஹித் ஷர்மா “ஆரம்பத்தில் இருந்தே நான் என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். யார்க்கர்களாக வீசவேண்டுமென முடிவு செய்திருந்தேன். ஆனால் பந்து விழக் கூடாத இடத்தில் விழுந்தது. என்னால் தூங்க முடியவில்லை. நான் பந்தை வேறு எப்படி வீசியிருக்கலாம். நாங்கள் வென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறேன். என்னால் தூங்க முடியவில்லை. இதனை கடந்து போக முயற்சி செய்கிறேன்” எனக் கூறியுள்ளார்.