திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 மே 2023 (20:14 IST)

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் சென்னை கிங்ஸ் வீரர் ஓய்வு

Ambathi Rayudu
சென்னை அணியின் வீரர் அம்பதி ராயுடு, அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்..

ஐபிஎல் 16வது சீசன் கிரிக்கெட் போட்டி  நேற்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள  நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டைன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

இதில், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி   வென்றது.

இன்று மதியம் வெற்றிக் கோப்பையுடன் சிஎஸ்கே அணியினர் சென்னை வந்தடைந்தனர். இந்த நிலையில், இறுதிப் போட்டியுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அம்பதி ராயுடு தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று தன் ஓய்வை அவர் அறிவித்துள்ளார். அதில், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.

நேற்று, சென்னை அணி வெற்றி பெற்றதும், அம்பதி ராயுடுவை அணி சார்பில் கோப்பையை வாங்க வைத்து கேப்டன் தோனி அவரை கவுரவித்தார்.

இந்த நிலையில், தன் ஓய்வு பற்றி அம்பதி ராயுடு கூறியதாவது:  ''ஆறு முறை ஐபிஎல் வெற்றியாளராக என் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்ததில் பெருமை கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.