வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 31 மே 2023 (09:21 IST)

TNPL- ஐ விட கம்மியான தொகைக்கு ஐபிஎல்-ல் ஏலம் போன சாய் சுதர்சன்…!

சமீபத்தில் நடந்த சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் “யார்டா இந்த பையன்’ எனக் கவனிக்க வைத்த வீரராக உருவானார் சாய் சுதர்சன். அந்த போட்டியில் 46 பந்துகளில் 96 ரன்கள் சேர்த்து நூலிழையில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்து அவுட் ஆனார்.

தமிழகத்தைச் சேர்ந்தவரான சாய் சுதர்சன் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டிகளில் விளையாடி அதன் மூலம் கவனம் பெற்று ஐபிஎல் தொடரில் குஜராத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். அவரை அடிப்படையான விலையான 20 லட்சம் ரூபாய்க்கே ஏலத்தில் எடுத்தது குஜராத். அவர் டி என் பி எல் இதை விட அதிகமான தொகைக்கு (20.18 லட்சம்) ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது தன்னுடைய திறமையால் அனைவரையும் கவனிக்க வைத்துள்ள அவர் விரைவில் இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பையும் பெறுவார் என்று இப்போதே மூத்த வீரர்கள் வாழ்த்த ஆரம்பித்துள்ளனர்.