1,403 நாட்களுக்குப் பிறகு விராத் கோலிக்கு கிடைத்த பெருமை.. குவியும் வாழ்த்துக்கள்..!
சுமார் 1,403 நாட்களுக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது சிம்மாசனத்தை கோலி மீட்டெடுத்திருப்பது, அவர் ஏன் 'கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்' என்று அழைக்கப்படுகிறார் என்பதை மீண்டும் உலகிற்கு நிரூபித்துள்ளது.
சமீபத்திய தரவரிசை பட்டியலின்படி, கோலி முதலிடத்தில் நீடிக்க, அவரை தொடர்ந்து டெரில் மிட்செல், ரோஹித் சர்மா, இப்ராஹிம் சத்ரான் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் அடுத்தடுத்த நான்கு இடங்களை பிடித்துள்ளனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் கோலியின் ஆதிக்கம் இன்னும் குறையவில்லை என்பதற்கு இந்த தரவரிசைப் பட்டியலே சாட்சியாக அமைந்துள்ளது. பல சவால்களை கடந்து மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ள கோலியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
Edited by Siva