புதன், 18 பிப்ரவரி 2026
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : சனி, 17 ஜனவரி 2026 (14:37 IST)

குடிநீருக்காக ரூ.3 லட்சம் செலவு செய்தாரா சுப்மன் கில்? ஏற்கனவே விராத் கோலி கதையும் இதுதானா?

குடிநீருக்காக ரூ.3 லட்சம் செலவு செய்தாரா சுப்மன் கில்? ஏற்கனவே விராத் கோலி கதையும் இதுதானா?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில், இந்தூரில் நடைபெறவுள்ள மூன்றாவது போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்தில் ரன் மற்றும் விக்கெட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் அதே வேளையில், மைதானத்திற்கு வெளியே வீரர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்து முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
 
இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற பெருமையை பெற்றிருந்தாலும், சமீபகாலமாக இந்தூரில் நிலவி வரும் அசுத்தமான குடிநீர் பாதிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தனது ஹோட்டல் அறையில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள அதிநவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை நிறுவியுள்ளார். 
 
பேக் செய்யப்பட்ட பாட்டில் குடிநீரையும் மீண்டும் சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த இயந்திரம், வீரர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குடிநீரை மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva