திங்கள், 25 செப்டம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 31 மே 2023 (09:20 IST)

ஐபிஎல் வென்ற கையோடு இங்கிலாந்து பறந்த சிஎஸ்கே & குஜராத் வீரர்கள்!

ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று முன் தினம் குஜராத் அகமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டில் வீழ்த்தியது. இதையடுத்து சென்னை அணி 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்த வெற்றியை முழுமையாக கொண்டாட முடியாமல் இப்போது உடனடியாக சிஎஸ்கே மற்றும் குஜராத் அணி வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக இங்கிலாந்துக்கு கிளம்பியுள்ளனர்.

ஏற்கனவே இரண்டு பேட்ஜாக இந்திய வீரர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் இப்போது சென்னை அணியின் ரவீந்தர ஜடேஜா, ரஹானே மற்றும் குஜராத் அணியின் கில், கே எஸ் பரத், முகமது ஷமி ஆகியோரும் உடனடியாக இங்கிலாந்துக்கு சென்று அங்கு அணியினரோடு பயிற்சியில் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.