திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 31 மே 2023 (12:28 IST)

கிராண்ட் பிக்ஸ் சர்வதேச போட்டியில் தங்கம் வென்ற செல்வ பிரபு - தினகரன் பாராட்டு

selva prabhu
கிரீஸ் நாட்டின் வெனிசெலியா நகரில் நடைபெற்ற கிராண்ட் பிக்ஸ் சர்வதேச போட்டியில்,‌ மும்முறை நீளம் தாண்டுதலில்  ஆடவர் பிரிவில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த செல்வ பிரபு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு டிடிவி. தினகரன் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’மதுரை மாவட்டத்தை சேர்ந்த செல்வ பிரபு கிரீஸ் நாட்டின் வெனிசெலியா நகரில் நடைபெற்ற கிராண்ட் பிக்ஸ் சர்வதேச போட்டியில்,‌ மும்முறை நீளம் தாண்டுதலில்  ஆடவர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டின் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த செல்வ பிரபு இந்தியாவிற்காக சாதனை படைத்திருப்பதை பெருமிதத்துடன் பாராட்டுகின்றேன்.

இந்த சாதனையின் வாயிலாக தாய்லாந்தில் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் 2023 Asian Athletics Championships போட்டிக்கு தகுதி பெற்றுள்ள செல்வ பிரபு, எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை பெறவும் வாழ்த்துகின்றேன்.’’என்று தெரிவித்துள்ளார்.