1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Mohammed shami talked about his exclusion in national team

ரஞ்சிப் போட்டிகளில் விளையாடும் என்னால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாதா?... ஷமி ஆதங்கம்!

முகமது ஷமி
இந்திய அணி உருவாக்கிய மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. இந்திய அணிக்காக உலகக்கோப்பை தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை அவர் தன் கைவசம் வைத்துள்ளார். ஆனாலும் காயம் காரணமாக அவர் அடிக்கடி அணியில் இருந்து விலக வேண்டிய சூழல் உருவாகிறது.

கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக முழங்கால் காயத்தினால் அவதிப்பட்டு வந்த ஷமி சமீபத்தில் இந்திய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக பங்களிப்பு செய்த அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின்  முதல் போட்டியிலேயே பங்களாதேஷ் அணிக்கு எதிராக 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆனாலும் அவருக்குத் தொடர்ச்சியாக அணியில் இடமளிக்கப்படவில்லை. விரைவில் நடக்கவுள்ள ஆஸி தொடரிலும் அவர் பெயர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் தான் தேர்வு செய்யப்படாதது குறித்துப் பேசியுள்ள ஷமி “என்னால் நான்கு நாட்கள் நடக்கும் ரஞ்சி போட்டியில் விளையாட முடியும் என்றால் ஒரு நாள் போட்டிகளில் விளையாட முடியாதா? இதுகுறித்து நான் முன்பே பேசிவிட்டேன். தேர்வு என்பது என் கையில் இல்லை.  எனக்கு ஃபிட்னெஸ் பிரச்சனை இருந்தால் நான் பெங்கால் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்க மாட்டேன். நான் எதுவும் பேசி தேவையில்லாமல் சர்ச்சையை உருவாக்க விரும்பவில்லை.” என ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
14 வயதில் துணை கேப்டன் பதவியில் வைபவ் சூர்யவன்ஷி.. ரஞ்சி டிராபியில் 280 ஸ்ட்ரைக் ரேட்