1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Indian team for asia cup will be announced next week

ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது?

சாம்பியன்ஸ் கோப்பை
ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைக் கொண்டு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை தொடரை நடத்தி வருகிறது, ஆசியக் கிரிக்கெட் கவுன்சில், இதன் அடுத்த சீசன் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி தொடங்கி பத்தொன்பதாம் தேதி வரை நடக்கவுள்ளது.

இந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 வடிவில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி அடுத்த வாரத்தில் 19 அல்லது 20 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
காதலிக்கு திருமணப் பரிசாக ரொனால்டோ அளித்த மோதிரத்தின் விலை இத்தனைக் கோடியா?