1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Shreyas iyer and jaiswaly would not be a part of india team in asia cup

ஆசியக் கோப்பைத் தொடரில் இவர்கள் இருவரும் இல்லை.. வெளியான லேட்டஸ்ட் தகவல்!

சாம்பியன்ஸ் கோப்பை
ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைக் கொண்டு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது, இதன் அடுத்த சீசன் செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி தொடங்கி பத்தொன்பதாம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்காக அணிகள் தயாராகி வருகின்றன.

இந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 வடிவில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி ஆகஸ்ட் 19 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் இடம்பெறப் போவதில்லை என்ற தகவல் பரவி வருகிறது. சமீபகாலமாக இவர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட்டும் அவர்கள் வழக்கமாக விளையாடும் இடங்களில் விளையாட வேறு வீரர்கள் உள்ளனர் என்பதால் அவர்களுக்கான இடம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
இதனால்தான் ரிஷப் பண்ட்டுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லையா?... வைரலாகும் தகவல்!