தொடர்புடைய செய்திகள்
- தோனி, கோலி இல்ல… ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கிய வீரர் இவர்தான்!
- ஒவ்வொரு அணியும் தங்கள் பர்ஸில் வைத்துள்ள மீதத்தொகை எவ்வளவு தெரியுமா?
- அணியின் நன்மைக்காக விளையாடுபவர்களே வேண்டும்… ராகுலை சீண்டிய லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா
- என் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள காரணம் இதுதான்… ரோஹித் ஷர்மா பகிர்ந்த கருத்து!
- ரோஹித் முதல் தோனி வரை… பல எதிர்பாராத திருப்பங்கள்… ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்களின் பட்டியல்!
ரஞ்சிக் கோப்பை போட்டிக்கு தேர்வு செய்யப்படாத ஷமி… மீண்டும் காயமா?
கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து காயத்தினால் அவதிப்படும் ஷமி, கிரிக்கெட்டில் இருந்து விலகி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். கணுக்கால் காயம் காரணமாக அவதிப்பட்ட அவருக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது.
அதையடுத்து இப்போது அவர் காயத்தில் இருந்து மீண்டெழுந்து வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் நடக்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப் படுகிறது. இதை உறுதிப் படுத்தும் விதமாக அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பவுலிங் பயிற்சியை பெங்களூருவில் மேற்கொண்டார்.
இந்நிலையில் அவர் ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக ரஞ்சிக் கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு அவரது காயத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவே காரணம் என சொல்லப்படுகிறது.