சச்சின் சாதனை தகர்ப்பு – கோலியின் கிரீடத்தில் மேலும் ஒரு சிகரம்!

Last Updated: ஞாயிறு, 22 நவம்பர் 2020 (17:05 IST)

ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை தகர்க்க உள்ளார்.

சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும்போது அவரின் சில சாதனைகள் எல்லாம் முறியடிக்கப்படவே முடியாது என நம்பிக்கொண்டிருந்த நிலையில் அதை ஒவ்வொன்றாக முறியடித்து வருகிறார் கோலி. இந்நிலையில் அடுத்து நடக்க வுள்ள ஆஸி தொடரில் அவர் மேலும் ஒரு சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

முதலில் தொடங்கும் ஒருநாள் தொடரில் அவர் 133 ரன்களை எடுத்தால் 12 அயிரம் ரன்களைக் கடந்துவிடுவார். இதன் மூலம் குறைந்த இன்னிங்ஸ்களில் அந்த சாதனையை செய்த வீரர் என்ற சாதனையை படைப்பார். அவர் 300ஆவது போட்டியின் போது 12000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். தற்போது கோலி 239 போட்டிகளில் மட்டுமே விளையாடி 11867 ரன்கள் எடுத்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :