விராட் கோலியை முறைத்தது ஏன்? போட்டி முடிந்ததும் அவர் என்ன சொன்னார்? பகிர்ந்துகொண்ட சூர்யகுமார் !

Last Updated: சனி, 21 நவம்பர் 2020 (15:21 IST)

கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் களத்தில் முறைத்துக் கொண்டது பற்றி இப்போது பேசியுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்
மும்பை மற்றும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ்வின் சிறப்பான பேட்டிங்கால் மும்பை வெற்றி பெற்றது. போட்டியின் ஒரு கட்டத்தில் கோலி சிறப்பாக ஆடிக் கொண்டு இருந்த சூர்யகுமாரை நோக்கி சென்று முறைத்துப் பார்த்து ஸ்லெட்ஜிங் செய்தார். இது ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. போட்டி முடிந்த பின்னர் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் கோலி இதுபோல ஒரு இளம் வீரரிடம் நடந்து கொள்ளலாமா எனக் கோலிக்கு எதிராய் கண்டனங்களை பதிவுகள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது அதுபற்றி சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். அதில் ‘போட்டியில் இருவரும் முறைத்துக்கொண்டது இரு தரப்பிலும் மிகவும் இயல்பாக நடந்தது. போட்டி முடிந்ததும் அதைப் பற்றி பேசி நாங்கள் இருவரும் சிரித்துக்கொண்டோம். அன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடியதாக கோலி என்னை வாழ்த்தினார்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :