செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (09:02 IST)

வலைப் பயிற்சியில் வித்தியாசமான ஷாட்டை ஆடிய கோலி… ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கோலி இன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்க உள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகளவில் எழுந்துள்ளன. பலரும்  விராட் கோலி தன்னுடைய உச்சத்தை கடந்துவிட்டார். அவரால் இனிமேல் மீண்டும் பழைய கோலியாக விளையாட முடியாது எனக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஆசியக்கோப்பை தொடரில் கோலி மீண்டும் தன்னுடைய பழைய பார்முக்கு திரும்புவார் என்ற பெரும் நம்பிக்கை உள்ளது. இந்நிலையில் நேற்று வலைப் பயிற்சியில் ஈடுபட்ட கோலி, சஹால் பந்துகளில் க்ளென் மேக்ஸ்வெல் போல ஸ்விட்ச் ஹிட் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை ஆடினார். மரபான ஷாட்களை விளையாடும் கோலி, இந்த ஷாட்களை விளையாடியுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.