1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Shaheen afridi praying for kohli to get back into form

“உங்களுக்காக நான் பிராத்திக்கிறேன்…” கோலியை நெகிழ்ச்சியடைய செய்த பாக். வீரர்!

கோலி
இந்திய அணியின் விராட் கோலி காயத்தால் ஆசியக் கோப்பையில் இருந்து விலகியுள்ள பாக் வீரர் ஷாகீன் அப்ரிடியை சந்தித்து பேசியுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக பாகிஸ்தான் அணி இந்தியாவை ஐசிசி தொடரில் வென்றது. இந்த போட்டியில்ச் சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய பேட்டிங் தூண்களை சாய்த்தார். இந்திய அணி உலகக்கோப்பையில் இருந்து வெளியேற பாகிஸ்தான் அணியுடனான தோல்வி முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள நிலையில் காயம் காரணமாக ஷாகீன் அப்ரிடி அணியில் இடம்பெறவில்லை. இது அந்த அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இந்திய வீரர்கள் மைதானத்தில் அவரை சந்தித்து உடல்நலம் குறித்து பேசி விசாரித்தனர். அப்போது கோலி, அவரிடம் நலம் விசாரித்த போது அப்ரிடி “நீங்கள் இந்த தொடரில் மீண்டும் பழையபடி விளையாட நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்” எனக் கூற, அவருக்கு நன்றி தெரிவித்தார் கோலி.
அடுத்த கட்டுரையில்
கால்பந்தாட்ட தடையை நீக்கிய ஃபிஃபா! – இந்தியாவில் நடைபெறுகிறது பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து!