சனி, 23 செப்டம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2022 (10:13 IST)

அடிக்கிறது செஞ்சுரி இல்ல.. ஆட்டமே செஞ்சுரிதான்..! – விராட் கோலி செய்யும் புதிய சாதனை!

இதுவரை பல போட்டிகளிலும் செஞ்சுரி அடித்த விராட் கோலி நடைபெற உள்ள ஆசியக்கோப்பை டி20ல் புதிய சாதனை படைக்க உள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் லெஜெண்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக உள்ளவர் விராட் கோலி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் சிறப்பான பல சாதனைகளை படைத்த விராட் கோலி, தற்போது கேப்டன்ஷிப்பை விடுத்து சக வீரராக விளையாடி வருகிறார்.

இதுவரை டெஸ்ட், ஒருநாள் என பல வகை போட்டிகளிலும் கலந்து கொண்ட விராட் கோலி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 100க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் தொடங்கவிருக்கும் ஆசியக்கோப்பை டி20 போட்டிகளில் விளையாடுவது மூலமாக உலகக்கோப்பை டி20யிலும் தனது 100வது ஆட்டத்தை விளையாட உள்ளார் விராட் கோலி.

ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள், டி20 என சகல போட்டிகளிலும் 100 ஆட்டங்களை கடந்து விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் என இதன் மூலம் புதிய சாதனையை படைக்க இருக்கிறார் விராட் கோலி.