தொடர்புடைய செய்திகள்
- ஆரம்ப போட்டிகளை இழக்கும் சூர்யகுமார் யாதவ்.. மும்பை இந்தியன்ஸுக்கு பின்னடைவு!
- கடும் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படும் பெங்களூர்… ஆர் சி பி போட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறதா?
- ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டாரா சூர்யகுமார்? அவரே அளித்த விளக்கம்!
- இந்திய அணிக்கு பெரிய வீரர்கள் தேவையில்லை… கோலியை மறைமுகமாக சீண்டிய கவாஸ்கர்!
- கே கே ஆர் அணி நட்சத்திர அந்தஸ்தை இழந்துவிட்டது… கம்பீர் வருத்தம்!
டி-20 உலகக் கோப்பையில் கோலி இருக்கிறாரா? இல்லையா?-பிசிசிஐ முடிவு
டி-20 உலகக் கோப்பையில் நட்சத்திர வீரர் கோலி அணியில் இடம்பெற வாய்ப்பு குறைவு என தகவல் வெளியாகிறது.
ஐபிஎல் 17 வது சீசன் முடிந்த பிறகு டி 20 உலகக் கோப்பை 2024 தொடர் தொடங்கவுள்ளது.
ஜூன் மாதம் 5 ஆம் தேதி இந்திய அணி , அயர்லாந்தை எதிர்கொள்ள உள்ளது.
ஜூன் மாதம் 5 ஆம் தேதி இந்திய அணி , அயர்லாந்தை எதிர்கொள்ள உள்ளது.
இத்தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. அதன்படி லீக் சுற்று மட்டுமே அமெரிக்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற போட்டிகளுக்காக பிட்ச் எப்படி இருக்கும்? என்று ஆராய பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் நிர்வாகிகளை இதற்கென்று பிரத்யேகமாக நியமித்திருந்தார்.
அந்தக் குழு இதுகுறித்த அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்திருந்தனர். அதில் நடக்கும் போட்டிகளில் ஸ்லோ பிட்ச் இருக்கும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், ஸ்லோ பிட்ச்களில் கோலி அபாரமாக விளையாடியது இல்லை என்பதால் அவரை டி 20 உலகக் கோப்பை போட்டியில் சேர்க்க முடியாத நிலையுள்ளது…ஐபிஎல் தொடரில் அவர் எப்படி விளையாடுவார் என்பதை பொறுத்து உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது பற்றி முடிவெடுக்கப்படும் என்று பிசிசிஐ மீட்டிங்கில் அகார்கர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்