1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL Will Rishabh Pant play in the matches..? BCCI Important Information..!!

ஐ.பி.எல். போட்டிகளில் ரிஷப் பந்த் விளையாடுவாரா..? பிசிசிஐ முக்கிய தகவல்..!!

Rishib Panth
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 
 
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர் சென்ற கார் தீப்பிடித்து எரிந்து உருகுலைந்தது. தலை, முதுகு, காலில் படுகாயம் ஏற்பட்ட நிலையில், ரிஷப் பந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் குணமடைந்து,  மீண்டும் கிரிக்கெட் விளையாட உடற்தகுதி பெறுவதற்காக கடந்த ஓராண்டாக பிசிசிஐ கண்காணிப்பில் பயிற்சி பெற்று வருகிறார்.
 
இந்த மாதம் ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ள நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக உள்ள ரிஷப் பந்த் உடற்தகுதி பெற்று விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
 
இந்த நிலையில், ஐபிஎல் 2024 தொடரில் பேட்டராகவும், விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பந்த் விளையாட தகுதி பெற்றதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 
இருப்பினும், முதல் சில போட்டிகளில் பேட்டராக மட்டுமே ரிஷப் பந்த் களமிறங்குவார் என்றும், அவரின் உடல் நிலை பொறுத்து கீப்பிங் செய்வார் என்று டெல்லி அணியின் நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
அடுத்த கட்டுரையில்
மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி முகாமை நிராகரித்தனரா ரோஹித் & பும்ரா?