தொடர்புடைய செய்திகள்
- தோனி- ஜுரெல் ஒப்பீடு… விமர்சனங்களை அடுத்து பல்டி அடித்த கவாஸ்கர்!
- பிசிசிஐ-யின் முடிவு வரவேற்கத்தக்கது- கபில் தேவ் ஆதரவு!
- துருவ் ஜுரேலை அதுக்குள்ள தோனியோட ஒப்பிடுவதா? கவாஸ்கர் மேல் கங்குலி காட்டம்!
- ஸ்ரேயாஸ் ஐயருக்கு இப்போது எந்த அறிவுரையும் தேவையில்லை… மும்பை அணிக் கேப்டன் ரஹானே கருத்து!
- இங்கிலாந்துடன் இறுதி டெஸ்ட் போட்டி! – இந்திய அணியில் யார்? யார்? வெளியானது பட்டியல்!
இந்திய அணிக்கு பெரிய வீரர்கள் தேவையில்லை… கோலியை மறைமுகமாக சீண்டிய கவாஸ்கர்!
தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் முதுகெலும்பாக பார்க்கப்படும் கோலி இடம்பெறவில்லை. அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததை அடுத்து அவர் இந்த தொடரில் இருந்து விலகினார்.
அவர் இல்லாமல் இந்திய அணி இந்த தொடரை எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற சந்தேகம் முதலில் ஏற்பட்டது. ஆனால் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையிலேயே தொடரை வென்றுள்ளனர்.
இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி பெரிய வீரர்கள் இல்லாமல் வென்றது. அந்த தொடரில் இளம் வீரர்கள் காட்டிய ஆக்ரோஷமும் துடிப்பும் இந்த தொடரிலும் காணப்பட்டது. அதனால்தான் நான் சொல்கிறேன். நமக்கு பெரிய வீரர்கள் தேவையில்லை என்று. எந்த பெரிய வீரராவது தான் இல்லாமல் அணி வெற்றி பெறாது என நினைத்தால் அவருக்கு நான் சொல்லிக் கொள்கிறேன் கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு. கிரிக்கெட் எப்போதும் குழு விளையாட்டு” எனக் கூறியுள்ளார். பெரிய வீரர் என்று அவர் பொதுவாக சொன்னாலும் பெயர் குறிப்பிடாமல் கோலியைதான் தாக்கியுள்ளார் என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு எளிதாக புரியும் ஒன்றுதான்.
அடுத்த கட்டுரையில்