வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 19 ஆகஸ்ட் 2023 (17:48 IST)

கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த விராட் கோலி

kohli
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த நிலையிலும், உலகக் கோப்பையில் இந்திய அணி தோற்றதாலும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

தற்போது மீண்டும் பார்முக்கு திரும்பிய தன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

சச்சின், தோனி போன்று உலகம் முழுவதும்  அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள விராட் கோலி கிரிக்கெட்டில் நேற்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

அவருக்கு கிரிக்கெட் வாரியம், சக விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த அவர் 13 முறை இரட்டை செஞ்சுரி பார்டனர்ஷிப் அமைத்து சாதனை படைத்துள்ளார்.

சச்சின் சாதனையை நெருங்கி வரும் கோலி( 34 வயது), 111 டெஸ்டில் விளையாடி 20 சதங்களுடன் 8676 ரன்கள் அடித்துள்ளார். ஒரு நாள் போட்டியில், 275 போட்டிகளில் விளையாடி 46 சதங்கள் அடித்துள்ளார்.115 டி 20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்ளிட்ட 37 அரைசதங்கள் அடித்து, 4008 ரன்கள் எடுத்துள்ளார். கிரிக்கெட்டில் மட்டும் 25,582 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.